Carnatic Vocal Classes at Surrey Tamil School by “Issai Mamani” Smt Vane Prathaban, BMusic (Annamalai University)

“Issai Mamani” Smt Vane Prathaban holds a first class Bachelor of Music degree in vocal from the Annamalai University, Chidambaram in Tamil Nadu, India. She was awarded the title of “Gaana Kalaa Ratna” by Oriental Examination Board London (OEBL) for her valuable contribution and achievement as a guru in classical music.

She was under the tutelage late Professor Smt Shiyamala Gobalan, Associate Professor Bhuvanakiri Shri R K Kumar, Professor Smt Saraswathy Nadarajah, Professor Shri B.G Govindarajan and Professor Shri Varathachariyar.While studying at the University she has won several prizes and participated in many music competitions within and outside of the faculty, including the University Founder’s Day Music Competition at Raja Annamalai Mandram and Thamil Issai Competition at Thanjavoor University conducted by Chief Minister Foundation.

She has successfully staged a number of vocal performances in many locations including Madurai Thamil Sangam and Chennai Thamil Issai Sangam.

At present she is a resident vocal teacher at Surrey Tamil School. Her students regularly receive high grades in their vocal exams conducted by Oriental Examination Board, London. In the last 10 years over 20 of her students have graduated in Diploma and Post Diploma in Carnatic Vocal. Vane teacher is also a Senior examiner for the OEBL.

Admissions are open at Surrey Tamil School.

Application – https://forms.gle/eDGaYFqoNaKM4scg7

சறே தமிழ்க் கல்விக்கூடத்தில் கர்நாடக இசை வகுப்புகள் – “இசை மாமணி” ஸ்ரீமதி வாணி பிரதாபன், BMusic( அண்ணாமலை பல்கலைக்கழகம், சிதம்பரம்).

இசை மாமணி” ஸ்ரீமதி, வாணி பிரதாபன், இந்தியாவின் தமிழ்நாடு, சிதம்பரத்தில் உள்ள அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் கர்நாடக சங்கீதத்தில் முதல்தர இசை இளங்கலைப் பட்டம் பெற்றுள்ளார். அவர் தனது மறைந்த தாயார் “சங்கீதபூஷணம்” ஶ்ரீமதி யஜ்னாதேவி கந்தவநாதன், அவரது சகோதரி வீணை வித்வான் ஶ்ரீமதி நீதிமதி தர்மகுலசிங்கம் போன்ற இசைக் கலைஞர்களின் குடும்பத்தைச் சேர்ந்தவர். பாரம்பரிய இசையில் குருவாக மதிப்புமிக்க பங்களிப்பு மற்றும் சாதனைக்காக ஓரியண்டல் தேர்வு வாரியம் லண்டன் (OEBL) ‘கான கலாரத்னா” என்னும் விருதை அவருக்கு வழங்கி கௌரவித்தது.

பல்கலைக்கழகத்தில் படிக்கும் போதே ராஜா அண்ணாமலை மன்றத்தில் நடைபெற்ற பல்கலைக்கழக நிறுவனர் தின இசைப் போட்டி, முதல்வர் அறக்கட்டளையால் நடத்தப்பட்ட பல்கலைக்கழகத் தமிழ் இசைப் போட்டி உட்பட பல்கலைக்கழகத்திற்கு உள்ளேயும் வெளியேயும் பல இசைப் போட்டிகளில் கலந்துகொண்டு பரிசுகளை வென்றுள்ளார்.மார்கழி இசை விழாவின் போது, ​​பல சபாக்களில் குறிப்பாக, மதுரை தமிழ் இசை சங்கம் மற்றும் சென்னை தமிழ் இசை சங்கம் என்பவற்றில் கச்சேரி செய்த அனுபவமும் அவருக்கு நிறைய உண்டு.

OEBL நடத்தும் கர்நாடக சங்கீத பரீட்சையில் அவரது மாணவர்கள் தொடர்ந்து உயர் தரங்களைப் பெற்று வருககிறார்கள். கடந்த 10 ஆண்டுகளில் சுமார் 20 ற்கு மேற்பட்ட மாணவர்கள் OEBL உடன் Diploma மற்றும் Post Diploma முடித்துள்ளனர். “இசை மாமணி” ஸ்ரீமதி வாணி பிரதாபன் OEBL இன் மூத்த தேர்வாளராகவும் உள்ளார்.

இவர் சறே தமிழ்க் கல்விக்கூடத்தில் கர்நாடக சங்கீதம் கற்பித்து வருகின்றார்.

விண்ணப்ப படிவம் – https://forms.gle/eDGaYFqoNaKM4scg7