
Carnatic Vocal Classes at Surrey Tamil School by Mrs Bavanuja Kajakaran
Mrs Bavanuja Kajakaran, who is also known as “Sangeetha Kalaviththakar,” was exposed to vocal, pannisai, and violin at the young age of 6.
In 2015, she has obtained her prestigious degree in Carnatic vocal music with first-class honours from the Ramanathan Academy, which is affiliated with Jaffna University. She also has achieved the title of Sangeetha Kalaviththakar for Carnatic Music (vocal) and Pannisai from the North Ceylon Oriental Music Society (NCOMS). She has won numerous gold medals for her unique talent in Sri Lanka, both in competitions and performances.
She has been fortunate to be a disciple of her mother Isai Kalaimaani Sri Ranjini Theivendran, Thavanathan Robert (Senior Lecturer at the University of Jaffna), and PANNISAI GURU OOTHUVAR (பண்ணிசை குரு ஓதுவார்) Rasiah Thiruganasampanthar.
She currently teaches Carnatic Music at the Surrey Tamil School. Admissions are open for Fine Arts at Surrey Tamil School for Navarathri and classes starting this Saturday 21st of October.
Application – https://forms.gle/eDGaYFqoNaKM4scg7

சறே தமிழ்க் கல்விக்கூடத்தில் கர்நாடக இசை வகுப்புகள் – “சங்கீத கலாவித்தகர்” ஸ்ரீமதி திருமதி பவனுஜா கஜாகரன்
“சங்கீத கலாவித்தகர்” ஸ்ரீமதி திருமதி பவனுஜா கஜாகரன் தனது 6 வயதிலேயே குரல் இசை , பண்ணிசை (தேவார இசை ) மற்றும் வயலின் ஆகியவற்றில் தனது திறமையை வெளிப்படுத்தியவர்.
திருமதி பவனுஜா கஜாகரன் 2015 இல் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்துடன் இணைந்த இராமநாதன் நுண்கலைக் கல்லூரியில் முதல் வகுப்பில் கர்நாடக இசையில் தனது (இசைக் கலைமாணி ) பட்டத்தைப் பெற்றார். வட இலங்கை சங்கீத சபையில் (NCOMS)
கர்நாடக இசையிலும் (குரல் இசை ) மற்றும் பண்ணிசையிலும் (தேவார இசை) கலாவித்தகர் பட்டத்தையும் பெற்றுள்ளார்.
இலங்கையில் தனது தனித்துவமான திறமையின்பால் இசை, பண்ணிசை போட்டிகள் மற்றும் நிகழ்ச்சிகளுக்காக பல தங்கப் பதக்கங்களைப் பெற்றுள்ளார்.
இவரது தாயார் இசை கலைமாணி ஸ்ரீ ரஞ்சினி தெய்வேந்திரன், மற்றும் தவநாதன் றொபேட் (முதுநிலை விரிவுரையாளர், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்),பண்ணிசை குரு ஓதுவார் இராசையா திருஞானசம்பந்தர் ஆகியவர்களின் வழிநடத்தலில் முறைப்படி கற்று தேர்ச்சி அடைந்தவர்.
இவர் சறே தமிழ்க் கல்விக்கூடத்தில் கர்நாடக சங்கீதம் கற்பித்து வருகின்றார். நவராத்திரியை முன்னிட்டு புதிய வகுப்புகள் 21/10/2023 சனிக்கிழமையிலிருந்து ஆரம்பிக்கின்றன.
விண்ணப்ப படிவம் – https://forms.gle/eDGaYFqoNaKM4scg7
