ஆசிரியர்: திருமதி சீதாதேவி ஜெகதீஸ்வர குருக்கள்
வளர்தமிழ் – 6
மாணவர்கள் தமிழர் கல்வி மேம்பாட்டு பேரவையின் (TEDC) தமிழ் புலன் மொழி பாடத்திட்டத்திற்கிணங்க, வளர்தமிழ் 1–12 நூல்களைப் பயன்படுத்தி தமிழ் கற்கின்றனர். அதன்படி வளர்தமிழ் – 6 நிலைக்கு
பாடநூல், பயிலல் வளநூல், வாசிப்போம் நூல் ஆகிய மூன்று நூல்கள் வழியாக வாசித்தல், பேசுதல், கேட்டல் ஆகிய மூன்று மொழித் திறன்களும் மாணவர்களுக்கு பயிற்றுவிக்கப்படுகின்றன.
📘 பாடநூல்
பாடநூலில்,
• தமிழர் பண்பாடு
• மன்னன் எல்லாளன்
• தமிழீழ நாடும் விடுதலைப் போராட்டமும்
• யாழ்ப்பாணத் தமிழரசு
• கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை
உள்ளிட்ட 12 தலைப்புகளின் கீழ் பாடங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இவை மாணவர்களுக்கு தமிழர் வரலாறு, பண்பாடு மற்றும் பாரம்பரிய விழுமியங்களை அறிந்து கொள்ள உதவுகின்றன.
📗 பயிலல் வளநூல்
பயிலல் வளநூலில்,
• பயிற்சிகள்
• வினா–விடைகள்
• தரவுகளின் அடிப்படையில் விடை காணல்
• வாக்கியம் அமைத்தல்
• இலக்கண வினா–விடைகள்
• கட்டுரை எழுதுதல்
போன்ற செயல்முறைகள் வழங்கப்பட்டு, மாணவர்களின் அறிவுத்திறன் மற்றும் சிந்தனைத் திறன் வளர்க்கப்படுகின்றன.
✍️ இலக்கணப் பகுதி
இலக்கணப் பகுதியில்,
• எழுத்து
• திணை
• பால்
• எண்
• இடம்
• எழுவாய்–பயனிலை
• பெயர்ச்சொற்களின் வகைகள்
• சொல்லியல் வகைகள்
ஆகியவை தெளிவான விளக்கங்களுடனும் பல்வேறு பயிற்சிகளுடனும் கற்பிக்கப்படுகின்றன.
📖 நற்பண்பு வளர்ச்சி
ஒவ்வொரு பாடத்துடனும்,
• ஒரு திருக்குறள்
• ஒரு பழமொழி
விளக்கத்துடன் எடுத்துரைக்கப்படுகின்றன. இதன் மூலம் மாணவர்களுக்கு நல்லொழுக்கமும் சிந்தனைத் திறனும் வளர்ந்து, கதை, கட்டுரை, கவிதை எழுதும் திறனும் மேம்படுகிறது.
📕 “வாசிப்போம்” நூல்
“வாசிப்போம்” நூலின் கீழ்,
• விருந்தோம்பல்
• நன்றி
• உண்மை
• உறவு
• சிந்தனைத் திறன் வளர்ப்பு
உள்ளிட்ட 10 தலைப்புகள் வழங்கப்பட்டு, மாணவர்களின் வாசிப்புப் பழக்கம் மற்றும் சிந்தனை ஆற்றல் ஊக்குவிக்கப்படுகிறது.
🏫 வகுப்பறை செயல்பாடுகள்
ஒவ்வொரு சனிக்கிழமையும்,
• ஆசிரியர் பாடங்களை விரிவாக விளக்குகிறார்
• கேள்வி–பதில்கள் மூலம் சிந்தனைத் திறன் தூண்டப்படுகிறது
• சிறு பரீட்சைகள் மூலம் நினைவாற்றல் மதிப்பீடு செய்யப்படுகிறது
மாணவர்கள் சுறுசுறுப்பாக ஈடுபட,
• குழு விளையாட்டுகள்
• தனிப்பட்ட செயல்பாடுகள்
நடத்தப்படுகின்றன.
🗣️ பேச்சாற்றல் மற்றும் எழுத்தாற்றல் வளர்ச்சி
மாணவர்கள் பின்வரும் செயல்பாடுகளுக்கு ஊக்கப்படுத்தப்படுகின்றனர்:
• ஒருவருடன் ஒருவர் உரையாடல்
• வினா எழுப்புதல்
• பல்வேறு பயிற்சிகள்
• வாழிட மொழியில் விளக்கம் அளித்தல்
• வாக்கியம் அமைத்தல்
• சொல்வதெழுதல்
• கட்டுரை மற்றும் கதை எழுதுதல்
🏠 வீட்டுப்பாடங்கள்
வீட்டுப்பாடங்கள் வழங்கப்பட்டு அவை முறையாகச் சரிபார்க்கப்படுகின்றன.
🎭 கலை–கலாசார வளர்ச்சி
ஒன்றுகூடல்கள், கலை மற்றும் கலாசார நிகழ்ச்சிகள், விளையாட்டு நிகழ்ச்சிகள் மூலம் மாணவர்களின்
• தன்நம்பிக்கை
• ஒழுக்கம்
• நடைமுறை பழக்கவழக்கம்
• சமூகப் பொறுப்பு
வளர்க்கப்படுகின்றன.
கலை–கலாசார நிகழ்வுகளில் பங்கேற்பதன் மூலம் மாணவர்கள் நல்ல ஒழுக்கமுள்ள, பொறுப்புணர்வுடைய, திறமையான பிள்ளைகளாக எதிர்காலத்தில் திகழ்வார்கள் என்பது எமது உறுதியான நம்பிக்கை.
Valar Tamil – Level 6
Students learn Tamil in accordance with the Tamil language curriculum of the Tamil Education Development Council (TEDC), using the Valar Tamil series (Levels 1–12).
At Valar Tamil – Level 6, three books are used:
• Textbook
• Practice Workbook
• “Let’s Read” Book
Through these, students are trained in the three core language skills:
Reading, Speaking, and Listening.
📘 Textbook
The textbook includes lessons under 12 topics such as:
• Tamil Culture
• King Ellalan
• Tamil Eelam and the Freedom Struggle
• Jaffna Tamil Kingdom
• Kavimani Desika Vinayagam Pillai
These lessons help students understand Tamil history, culture, and traditional values.
📗 Practice Workbook
The practice workbook provides:
• Exercises
• Question–Answer activities
• Data-based problem solving
• Sentence construction
• Grammar exercises
• Essay writing
These activities help develop students’ knowledge, thinking ability, and analytical skills.
✍️ Grammar Section
The grammar section includes:
• Letters
• Types of landscapes (Thinai)
• Gender
• Number
• Place
• Subject and Predicate
• Types of nouns
• Word categories
These are taught with clear explanations and various exercises.
📖 Character and Moral Development
Each lesson includes:
• One Thirukkural
• One proverb
with explanations.
This helps students develop good character, moral values, and critical thinking skills, while also improving their story, essay, and poetry writing abilities.
📕 “Let’s Read” Book
The “Let’s Read” book covers 10 themes such as:
• Hospitality
• Gratitude
• Truthfulness
• Relationships
• Development of thinking skills
This encourages students to develop reading habits and deeper thinking skills.
🏫 Classroom Activities
Every Saturday:
• Teachers explain lessons in detail
• Question–answer sessions stimulate thinking
• Short tests are conducted to assess memory and understanding
To ensure active participation, students engage in:
• Group games
• Individual activities
🗣️ Development of Speaking and Writing Skills
Students are encouraged to participate in:
• Conversations with peers
• Asking questions
• Various practice activities
• Explaining in their spoken language
• Sentence construction
• Dictation
• Essay and story writing
🏠 Homework
Homework is regularly assigned and carefully reviewed.
🎭 Arts and Cultural Development
Through gatherings, cultural events, arts programs, and sports activities, students develop:
• Self-confidence
• Discipline
• Good habits
• Social responsibility
Participation in these activities helps students grow into well-disciplined, responsible, and talented individuals, which is our firm belief for their future success.
விண்ணப்ப படிவம் – https://forms.gle/eDGaYFqoNaKM4scg7
Valarthamil 6 Students Performances
