Veena Classes at Surrey Tamil School by Mrs Neethimathy Tharmakulasingam

Smt Neethimathi Tharmakulasingham hails from a musical family. Her mother, late ‘Sangeetha Booshanam’ Smt Yajnadevi Kanthavanathan, was a well known music teacher and her sister ‘Isai Mamani’ Smt Vane Prathaban is a vocal teacher.

Smt Neethimathi studied in Adyar music college Chennai in 1985 and was awarded the title of ‘Sangeetha Vidwan’. Her interest in music stemmed from her mother, from whom she started learning veena and vocal, at the age of 10. Her musical service has been continuing across France, Sri Lanka and here in England for many years.

She continues to successfully host annual musical events together with her sister, where she showcases her students’ talents with pride. She strives to bring out the best in each of her students. In 2022, she was awarded the title of ‘Gaana Kalaaratna’ by the Oriental Examination Board London.

Admissions are open at Surrey Tamil School

Application – https://forms.gle/eDGaYFqoNaKM4scg7

சறே தமிழ்க் கல்விக்கூடத்தில் வீணை இசை வகுப்புகள் – ‘சங்கீத வித்வான்’ ஸ்ரீமதி நீதிமதி தர்மகுலசிங்கம்

ஸ்ரீமதி நீதிமதி தர்மகுலசிங்கம் இசைக் குடும்பத்தில் பிறந்தவர். இவரது தாயார் மறைந்த ‘சங்கீத பூஷணம்’ ஸ்ரீமதி யஜ்னாதேவி கந்தவநாதன் நன்கு அறியப்பட்ட இசை ஆசிரியை மற்றும் அவரது சகோதரி ‘இசை மாமணி’ ஸ்ரீமதி வாணி பிரதாபன் ‘சங்கீத ஆசிரியை ஆவார்.

ஸ்ரீமதி நீதிமதி அவர்கள் 1985 இல் சென்னை அடையாறு இசைக் கல்லூரியில் பயிற்சி பெற்று ‘சங்கீத வித்வான்’ என்ற பட்டத்தைப் பெற்றார்.

ஸ்ரீமதி நீதிமதி இளம் வயதிலேயே தனது தாயால் இசையில் ஈர்க்கப்பட்டார், மேலும் 10 வயதில் தனது தாயிடமிருந்து வீணை மற்றும் கர்நாடக சங்கீதத்தை கற்கத் தொடங்கினார். இவரது இசைச் சேவை இலங்கை, பிரான்ஸ் மற்றும் இங்கிலாந்திலும் பல வருடங்களாக தொடர்கிறது. அவர் தனது சகோதரியுடன் சேர்ந்து ஆண்டுதோறும் வெற்றிகரமான இசை நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார். அதில் அவரது திறமையான மாணவர்கள் பெருமையுடன் பங்கேற்கின்றனர். ஸ்ரீமதி நீதிமதி, ஒவ்வொரு மாணவர்களிடமிருந்தும் சிறந்ததைக் கொண்டு வர முயற்சிக்கும் ஆசிரியர் ஆவார். இவருக்கு 2022 ஆண்டில் ‘கான கலாரத்னா’ என்ற பட்டத்தை ஓறியன்ரல் பரீட்சை திணைக்களம் (இங்கிலாந்து) வழங்கி கெளரவித்தது .

இவர் சறே தமிழ்க் கல்விக்கூடத்தில் கற்பித்து வருகின்றார்.

விண்ணப்ப படிவம் – https://forms.gle/eDGaYFqoNaKM4scg7