Tamil Schoo Letter Head

தமிழ் ஆசிரியர் வெற்றிடம்

4 முதல் 16 வயதான சிறுவர்களுக்கு தமிழ் மொழியைக் கற்பிப்பதில் உங்களுக்கு அதீத ஆர்வமும், அர்ப்பணிப்பும் உண்டா?

எமது சிறார்கள் தமிழ் மொழியையும் மேடை நிகழ்வுகளையும் செம்மையாகவும், ஆர்வத்துடனும் பயிலும் வகையில் பயனுள்ள மாற்றங்களை ஏற்படுத்த உங்களால் முடியுமா? 

அவ்வாறாயின், எம் சிறுவர்களிடையே தமிழை வளர்க்கவும், வளப்படுத்தவும் சறே தமிழ் கல்விக்கூடத்துடன் கைகோருங்கள்! 

எங்கள் கல்விக்கூடத்தின் ஆசிரியர்களில் ஒருவராக இணைய இன்றே விண்ணப்பியுங்கள்.

நாம் யார்! 

2008 ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட சறே தமிழ் கல்விக்கூடம், சறேயில் அமைந்துள்ள Raynes Park High Schoolல் இயங்கிவருகிறது. 

Kingstonஐயும் அதனை அண்டியுள்ள பிரதேசங்களில் வசிக்கின்ற தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட எமது மக்களின் மொழி மற்றும் பாரம்பரிய கலாச்சார தேவைகளைப் பூர்த்திசெய்வதே எமது அடிப்படை நோக்கமாகும். வாராந்தம் சனிக்கிழமைகளில் நடைபெறும் எமது பாடசாலையில் முற்பகல் 9.30 மணி தொடக்கம் 11.50 மணிவரை தமிழ் மொழியும், அதன் பின்னர் 11.50 மணி தொடக்கம் பிற்பகல் 2.30 மணிவரை நுண்கலைகளும் கற்பிக்கப்படுகின்றன.

பதவி வெற்றிடம்: 

ஒரு தமிழ் ஆசிரியர் என்ற வகையில், நீங்கள் தமிழ் மொழியைச் செம்மையாகவும், அர்ப்பணிப்புடன் கூடிய ஆர்வத்துடனும் பயிற்றுவிப்பதற்கும், தமிழர் கல்வி மேம்பாட்டு பேரவையின் (TEDC) பாடத்திட்டத்திற்கு அமைவாக மாணவர்களை நெறிப்படுத்துவதற்கும் பொறுப்புள்ளவராக இருப்பீர்கள்.

பிரத்தியேக தகைமைகள்

கல்விசார் தகைமைகள்: TEDC பாடத்திட்டத்துடனான பரிச்சயம் 

தமிழ் இளமாணி/முதுமாணி பட்டத்தைக் கொண்டிருப்பது மேலதிக அனுகூலம். 

அனுபவம்: தமிழ் மொழி கற்பித்தலில் குறைந்தது மூன்று வருட அனுபவம்.

ஆர்வம்: மாணவர்களிடம் தமிழ் மொழி மற்றும் தமிழ் மொழியிலான மேடை நிகழ்வுகளை வளர்க்கும் எண்ணம்

தொடர்பாடல் திறன்கள்: தமிழ் மொழியில் மிகச் சிறந்த எழுத்து மற்றும் பேச்சாற்றல். அடிப்படை ஆங்கிலத்தில் தொடர்பாடக்கூடிய ஆற்றல் 

அர்ப்பணிப்பு: பல்வேறு தகைமை மட்டத்திலுள்ள மாணவர்களுடன் அர்ப்பணிப்புடன் பணியாற்றும் பண்பு

நெகிழ்வுத்திறன்: ஒவ்வொரு மாணவரினதும் ஆற்றலுக்கேற்ப கற்பிக்கும் முறையில் நெகிழ்வுத்தன்மையினைப் பேணும் விருப்பு

சாதக மனப்பாங்கு: மாணவர் பயிலுகை மற்றும் சமூக மேம்பாடு குறித்த நேர்மறையான மனப்பாங்கு

தொழில்சார் கடமைகள்: 

  • மாணவர்களுக்கு தமிழ் மொழி வகுப்புக்களை நடாத்துதல்
  • TEDC  பாடத்திட்டத்திற்கு அமைவாக மாணவர்களின் பங்களிப்புடன் கூடிய செயன்முறை பாடநெறித்திட்டங்களை உருவாக்குதல்
  • மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் ஆக்கபூர்வமான பின்னூட்டங்களை வழங்குதல்
  • பாதுகாப்பானதும் காத்திரமானதுமான பயிலும் புறச்சூழலுடன் கூடிய வகுப்பறையினை மேற்பார்வை செய்தல்
  • ⁠கிரமமான பாடசாலைக் கூட்டங்கள், வருடாந்த தமிழமுதம் போன்ற இன்னோரன்ன பாடசாலை நிகழ்வுகளுக்கு மாணவர்களைத் தயார் செய்தல்.

விண்ணப்பங்கள்  

தகுதியான விண்ணப்பதாரிகள் தத்தமது முழுமையான சுயவிபரக் கோவையையும் (CV), தமிழ் மொழி கற்பிப்பதில் தங்களுக்குண்டான அனுபவத்தையும், ஆர்வத்தையும் பிரதிபலிக்கக்கூடிய முகப்புக் கடிதம் (Cover Letter) ஒன்றையும் இணைத்து education@surreytamilschool.com எனும் மின்னஞ்சல் முகவரிக்கு 10/09/2024 க்கு முன் அனுப்பிவைக்கவும். நேர்முகத் தேர்வுகள் 14/09/2024 அன்று நடத்தப்படும்.

மேலதிக விபரங்களுக்கு – சிறிரங்கன் 07873 493950

Vacancy for position of Tamil Teacher

Are you passionate about teaching Tamil Language to children aged 4 to 16?

Are you someone who can make a difference to a child’s future with additional stage performance skills?

Join Surrey Tamil School in training young minds by fostering an interest in learning Tamil Language and making them admire the rich Tamil Culture! 

Don’t wait anymore – Apply now for a teaching position at Surrey Tamil School (STS).

About STS: Established in June 2008, Surrey Tamil School is now based at Raynes Park High School, New Malden, Surrey. Our mission is to fulfil the language and cultural aspirations of the Tamil community living in the Borough of Kingston upon Thames and beyond. Our school operates on term Saturdays, offering Tamil Language classes from 9:30 AM to 11:45AM, followed by Eastern Fine Arts classes from 11:50 AM to 2:30 PM.

Role Description: As a Tamil Language teacher, you will be responsible for teaching and guiding pupils in developing their skills in all forms of Tamil Language, following the TEDC curriculum. 

Personal Specifications

Qualifications: Familiarity with the TEDC curriculum 

Holding a degree or a postgraduate degree in Tamil Language would be advantage

Experience: Minimum 3 years of service in teaching. 

Other: Passion for developing skills for students in Tamil language including public speaking and dramas.

Communication: Good verbal and written communication in Tamil Language. Basic skills in English Language.

Interpersonal Skills: Ability to tackle pupils of different abilities and needs.

Adaptability: Willingness to implement innovative  techniques to improve the learning environment.

Positive energy: A positive mindset towards training children as part of social development.

Job Description:

  • Conducting Tamil language classes for pupils
  • Creating interactive learning sessions aligned with the TEDC Tamil curriculum
  • Provide constructive feedback to pupils and parents
  • Manage and monitor the class to ensure a safe and pleasant learning environment
  • Prepare children for performing at school assemblies, annual stage events and other special events at school

How to Apply

Interested candidates can submit their CV with a cover letter highlighting their teaching experience and demonstrating their passion for Tamil language teaching. Email to education@surreytamilschool.com before 10th September 2024. Interviews will be held on 14th September 2024

For more information – Srirangan 07873 493950