Memorial Day 2013

Memorial Day 18 May 2013


Poem by a Surrey Tamil School Teacher


 


கொள்ளி வைக்க ஆளின்றி முள்ளி என்னும் ஈமத்தில்அள்ளுண்டு போன உறவுகளே ...


உடன் விளையாடிய நண்பனே ....


முலைப்பால் ஊட்டிய தாயே ..


கிளம்பி சென்ற என் மகனே ..


நேற்றிருந்த என் வீடே ...


நெடிந்துயர்ந்த பனை மரமே ...


ஓயாத அலறல்களை அள்ளி


ஓய்ந்து போன காற்றே ..


குவிந்து கிடக்கும் பிணங்களையும் ..


சிதைந்து கிடக்கும் மார்புக்கூடுகளையும் ..


தோள் மீது படுத்தி ..


துயரம் கூட்டி அழும் ..


என் யாருமற்ற நிலமே ...


முள்வேலி அதிர அதிர அடித்துக்கொல்லப்பட்ட


இளைஞனின் அலறலும் ...


இரவு தோறும் இழுத்துச்செல்லப்பட்ட ..


எங்கள் பெண்களின் ஓலமும் ...


உயிரை அறுக்குது இன்னும்...


எத்தனை தமிழர்கள் பற்றி எறிந்தனர்


எத்தனை உயிர்கள் வெந்து சரிந்தது ..


எத்தனை கண்ணீர் காய்ந்து போனது ...


எத்தனை இழந்தோம் ..


அத்தனையும் செய்த அரக்கன் வாழவிடல் முறையோ


இத்தனைக்கும் பின்பும் தமிழன் இரக்கம் கொள்ள இறையோ..?


எம்மை அழித்தவன் சந்ததி அழிந்து போகட்டும் ..


கருகி எரிந்து காணாமல் போகட்டும் ..


எங்கள் பெருந்துயரம் ...அவர்களை ,,


பிய்த்துப் பிய்த்துப் போடட்டும்


எங்கள் புலம்பல் அவர்களை சிதயிடட்டும்


என் மக்களின் இரத்தத்தில் கைகளும் மனங்களும் தோய்த்தவர்களே...


உங்களை சபிக்கிறேன் ..


அன்னை மண்ணே ..


வென்றவர்கள் தோற்க


வெக்கி நின்ற வன்னி மண்ணே


குறித்துக்கொள்


 


இனக்கொலை வெறியோடு எம்மை துரத்தும்


சிங்கள எதிரி மட்டுமல்ல ...


.


தப்பி ஓடிய நம் மக்களை தடுத்தவர் ..


எம் மக்களுக்கெதிராய் துப்பாக்கி நீட்டியவர் ..


கொன்றவர்கள் ...


காட்டிக்கொடுத்தவர்கள் ...கத்தி கொடுத்தவர்கள்


தடுக்காதவர்கள் ...


தடுத்தவரை தடுத்தவர்கள் .....


என் அண்ணன் தம்பி ஆனாலும் அவர்களை சபிக்கிறேன் ..


 


என் மண்ணே சங்காரம் செய்வாய் நீயென்று சபதமிடுகிறேன்.


இவர்கள் மீதெல்லாம் தர்ம சங்காரம் ஊழித்தீயாய் இறங்கட்டும்


உலகின் எந்த மூலையிலிருந்தாலும் அவர்கள் ஒழிந்து போகட்டும் ...


 


என் தோழ தோழியரின் முரசுகளே


எரிக்கப்பட்ட என் மண்ணிலிருந்து ...


எஞ்சிய வேர்களிலிருந்து ..


என்றும் இருக்கும் தமிழ் வீரத்திலிருந்தும் ....


இறந்தவர்களுக்கான ஒபாரியாய்


தொலைந்தவர்களுக்கான அழைப்பாய்


இல்லம் மீள்தலாய் ..


மீண்டும் மீண்டும் வாழும் ஆசையாய்


சுதந்திர விருப்பாய்...


எம் வாழ்வின் பரணியை இசையுங்கள்


என் மக்களின் வாழும் ஆசை இது ..


மடியாத கனவு இது


தோற்காத எங்கள் வரலாறு ...


 


..


நந்திக்க டல் அருகிலொரு நந்தவனத்தில்


உந்தி எழும் சுதந்திர தேசக்காற்றிழுத்து ...


நிமதியாய் நாம் உறங்கும் நாள் வரை


காற்றில் ஆடும் பனைமரம் சொல்வதை....


கரைகளில் மோதும் கடலலை சொல்வதை...


கேட்டு நாமும் உரக்கச்சொல்லுவோம்...


தமிழர் தாகம் தமிழீழ தாயகம் !


தமிழர் வீரம் சொல்லும் மாமண்ணே வணக்கம்


மாவீரர் உயிர்சுமக்கும் கருப்பையே வணக்கம்


மறத்தமிழர் வாழ்கின்ற புலி மண்ணே வணக்கம்!


 


Copyright Surrey Tamil School 2016-2018