சறே கல்விக் கூடம் (Surrey Tamil School) மாணவர்கள் தமிழ் மொழியையும் பண்பாட்டையும் அறிந்து வளர உதவும் சிறந்த தமிழ் வகுப்புகளை வழங்குகிறது. எங்கள் வகுப்புகள் வாசிப்பு, எழுத்து, பேச்சு மற்றும் புரிதல் திறன்களை மேம்படுத்தும் வகையில் சுவாரஸ்யமான மற்றும் தொடர்புடைய முறையில் நடத்தப்படுகின்றன. கதைகள், விளையாட்டுகள் மற்றும் பண்பாட்டு செயல்பாடுகள் மூலம் மாணவர்கள் மகிழ்ச்சியுடன் கற்றுக்கொள்ளும் சூழலை உருவாக்குகிறோம்.
எங்கள் கல்விக்கூடம் தமிழர் மேம்பாட்டு பேரவை (TEDC) பாடத்திட்டத்திற்கு அமைவாக மழலையர் நிலை, பாலை நிலை தொடக்கம் வளர்தமிழ் 6 வரை கற்பிக்கிறது. அதன் பின், மாணவர்கள் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் பாடத்திட்டத்திற்கு அமைவாக GCSE (O/L) தேர்வுகளுக்குத் தயார்படுத்தப்படுகின்றனர். அனைத்து நிலை மாணவர்களும் தன்னம்பிக்கையுடன் தமிழ் கற்றுக்கொள்ள வலுவான அடித்தளத்தை அமைப்பதே எங்கள் நோக்கம்.
மாணவர்கள் தமிழ் கற்றலுடன் அதனை துணிவுடன் வெளிப்படுத்தும் வகையில், ஒவ்வொரு வகுப்பிலும் மாணவர் ஒன்றுகூடல்கள் மூலம் நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் வாய்ப்புகள் வழங்கப்படுகின்றன. மேலும், மாணவர் ஒன்றுகூடல்கள் மாணவர்களே திருக்குறள் கூறி தொடங்கும் சிறப்பும் உள்ளது. ஆண்டுதோறும் “தமிழமுதம்” என்ற நிகழ்வு நடத்தப்பட்டு, அனைத்து மாணவர்களும் மேடையில் தங்கள் திறமைகளை வெளிப்படுத்த ஊக்குவிக்கப்படுகின்றனர்
Surrey Tamil School provides high-quality Tamil classes that help students learn and grow in both the Tamil language and its rich culture. Our classes are designed to develop reading, writing, speaking, and comprehension skills through engaging and interactive methods. We create an enjoyable learning environment using stories, games, and cultural activities.
Our institution follows the curriculum of the Tamil Education Development Council (TEDC), offering classes from early years (Mazhalai and Paalai levels) up to Valar Tamil Level 6. After this, students are prepared for the GCSE (O/L) examinations based on the University of Cambridge curriculum. Our goal is to build a strong foundation so that students at all levels can learn Tamil with confidence.
In addition to learning the language, students are encouraged to express themselves confidently through participation in class assemblies and activities. A special feature of our assemblies is that they are initiated by students reciting Thirukkural. Furthermore, we host an annual event called ?Tamil Amudham,? where all students are given the opportunity to showcase their talents on stage.
வளர்தமிழ் 1 Valarthamil 1
வளர்தமிழ் 4 Valarthamil 4
கேம்பிறிஜ் ஜீ.சீ.எஸ்.சீ Cambridge GCSE
விண்ணப்ப படிவம் – https://forms.gle/eDGaYFqoNaKM4scg7
