திருமதி ரேணுகா ஜெபநேசன்

யாழ்ப்பாணத்தை பிறப்பிடமாகக் கொண்ட  திருமதி ரேணுகா ஜெபநேசன் ஆரம்பக் கல்வியை யாழ்/பெரிய புலம் மகாவித்தியாலயத்தில் கற்று பின்பு 6ம் வகுப்பில் இருந்து 10ம் வகுப்பு(O/L)  வரை கொக்குவில் இந்துக் கல்லூரியிலும்  அதன் பின்பு உயர்தரத்தினன(A/L) கலைப் பிரிவில் வவுனியா இறம்பைக்குளம் மகளீர் வித்தியாலத்தில் கற்றார்.

பின்பு வவுனியா தேசிய கல்வியியற் கல்லூரியில் ஆரம்பப்பிரிவு ஆசிரியராக இரண்டு வருடங்கள் பயிற்சி முடித்து மூன்றாவது வருடம் வவுனியா மகாவித்தியாலயத்தில் தரம் 2 மாணவர்களுக்கு ஆசிரியராக நியமித்து அப்பாடசாலையில் இரண்டு வருடங்கள் பணிபுரிந்தார்.

அதன் பின்னர் வவுனியா தேசிய கல்வியியற் கல்லூரியினால் பயிற்றப்பட்ட ஆசிரியை ஆரம்பப் பிரிவு(Diploma in Teaching primary) என்ற பட்டம் வழங்கப்பட்டது.

அதன் பின்னர் வவுனியா இறம்பைக்குளம் மகளிர்வித்தியாலயத்தில் ஆரம்பப் பிரிவு ஆசிரியராக நியமணம் பெற்று அங்கு சில வருடங்கள் கல்வி கற்பித்தார். அத்தோடு  வட இலங்கை சங்கீத சபை நடத்தும் பரீட்சையில் பரதநாட்டியத்தில் ஆசிரியர் தரத்தினையும் முடித்துள்ளார். அதன்பிறகு திருமணமாகி பிருத்தானியாவுக்கு குடியேறினார்.

திருமதி ரேணுகா ஜெபநேசன் எங்கள் சறே தமிழ் பள்ளிக்கூடத்தில் மழலையர் நிலை , பாலர் நிலை, வளர்தமிழ் 1, வளர்தமிழ் 2 வகுப்புகளுக்கு ஆசிரியராக  கிட்டத்தட்ட 15 வருடங்களுக்கு மேல் பணியாற்றிவருகிறார்.

Mrs. Renuka Jebanesan, who hails from Jaffna, received her primary education at Jaffna/Periyapulam Maha Vidyalayam. She later studied from Grade 6 to Grade 10 (O/L) at Kokuvil Hindu College. After that, she pursued her Advanced Level (A/L) studies in the Arts stream at Vavuniya Rampaikulam Girls’ College.

She then completed a two-year teacher training program as a primary school teacher at the Vavuniya National College of Education. During her third year, she was appointed as a Grade 2 teacher at Vavuniya Maha Vidyalayam, where she served for two years.

Following this, she was awarded the Diploma in Teaching (Primary) by the Vavuniya National College of Education.

Later, she was appointed as a primary school teacher at Vavuniya Rampaikulam Girls’ College, where she taught for several years. In addition, she successfully completed the Teacher Grade qualification in Bharatanatyam conducted by the North Ceylon Sangeetha Sabha. After her marriage, she migrated to the United Kingdom.

Mrs. Renuka Jebanesan has been serving as a teacher for the Nursery, Preschool, Valar Tamil 1, and Valar Tamil 2 classes at our Surrey Tamil School for nearly 15 years.