Surrey Tamil School
சறே கல்விக் கூடம்
எங்கும் ஒளி பரப்பி எழிலுடனே
சங்கத் தமிழ் வளர்க்க சறேயினிலே
பொங்கும் கல்விகூடம் தழைத்திடவே
எங்கள் கரமிணைந்து பணி செய்வோம்.
அரிய நெறிகள் அன்னை தமிழ் கலைகள்
அயர்விலாது கற்று உயர்ந்திடுவோம்
உரமுடன் மண்ணின் மகிமைதனை
உலகெங்கும் அறிய உணர்த்திடுவோம்.
வளர்கவே சறே தமிழ் கல்விக்கூடம்
வளர்ந்திடும் தளிர்கள் ஒளிபெறவே
பரந்த எம் உறவுகள் இணைந்திடவே
பைந்தமிழால் பாலம் அமைத்திடுவோம்.
ஆக்கம் – திருமதி மதினி விஜயகுமார்
இசை – திருமதி சியாமளா விக்னேஸ்வரன்