
திருமதி கமலா பராபரன்
இவர் இலங்கையில் உள்ள காரைநகரை பிறப்பிடமாகக் கொண்டவரும் காரைநகரிலுள்ள வியாவில் பாடசாலையில் ஆரம்பக் கல்வியைக் கற்று பின்பு உயர்தர கல்வியை Yarlton கல்லூரியிலும் பின்பு உயர்தரகல்வியை விஞ்ஞான பீடதுறையில் இந்துக்கல்லூரியிலும் கல்வி பயின்றார். அதன் பின்பு இவர் யாழ் திறந்த வெளி பல்கலைக்கழகத்தில் கணினி துறையில் பயிற்சி பெற்றார். அதன் பிறகு கொழும்பில் உள்ள பம்பலப்பட்டியில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றிலும் கணினி பயிற்சி பெற்று 1998 ஆம் ஆண்டு இலண்டன் வந்தார். அத்துடன் இவர் தமிழுடன் சங்கீதத்திலும் ஆர்வம் இருந்தபடியால் அகில இலங்கை சங்கீத சபையினால் நடாத்தப்பட்ட பரிட்சையில் நான்கு ஆண்டுகள் பயிற்சி பெற்று அதில் திறமை சித்தி பெற்றார். அத்துடன் இவர் சமயமும் தமிழும் பிரிக்க முடியாதது ஒன்றாக இருப்பதை உணர்ந்து சமயத்திலும் மிகுந்த ஈடுபாடுடையவர். இலங்கையிலும் ஓதுவார் ஐயா அவர்களிடம் பண்ணிசை பயின்று இலண்டடினிலும் விம்பிள்டன் பிள்ளையார் கோயிலில் ஓதுவார் அய்யாவிடம் பண்ணிசை பயின்று வருகின்றார். பண்ணிசை பயின்று வருவதோடு மட்டுமல்லாமல் பிள்ளைகளுக்கு தேவாரம் ,திருவாசகம் அதாவது பஞ்ச புராணம் சொல்லிக் கொடுத்து கோயில்களிலே பஞ்ச புராணமும் பாட வைக்கின்றார். அத்துடன் கடந்த ஐந்து வருடங்களாக மேற்றன் தமிழ் பாடசாலையில் தமிழ் ஆசிரியராகவும் கல்வி கற்பிக்கிறார். இவர் அங்கு நடக்கும் நாடக விழாவில் பல நாடகங்களை எழுதி மாணவர்களை பயிற்றுவித்து அரங்கேற்றிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அத்துடன் கடந்த மூன்று வருடங்களாக சறே தமிழ் பாடசாலையில் வளர்தமிழ் 2 வளர்தமிழ் 3ஆகிய வகுப்புகளுக்கு உதவி ஆசிரியராகவும் தற்போது கேம்பிரிட்ஜ் மாணவர்களுக்கு உதவி ஆசிரியராகவும் இருந்து வருவதில் மிகவும் பெருமை அடைகிறார்.
Mrs. Kamala Paraparan
Native of Karainagar, Sri Lanka, received her primary education at Viavil School in Karainagar, then pursued higher education at Yarlton College and then higher education at Hindu College in the Faculty of Science. After that, she received training in the computer department at the Jaffna Open University. After that, she received computer training at a private institute in Bambalapitiya, Colombo and came to London in 1998. She was also interested in music along with Tamil, so she trained for four years in the examination conducted by the All Sri Lanka Music Council and achieved proficiency in it. She also realized that religion and Tamil are inseparable and is deeply involved in religion. She has also been teaching Tamil at the Merton Tamil School for the past five years. It is noteworthy that she has written, trained and performed several plays at the drama festival held there. She is also very proud to have been an assistant teacher for Valar Tamil 2 and Valar Tamil 3 classes at Saray Tamil School for the past three years and is currently an assistant teacher for Cambridge students.
