சறே தமிழ் கல்விக்கூடம், தமிழ்மொழி, நன்னெறி மற்றும் தென்கிழக்காசிய நுண்கலைப் பாடங்களை கற்பிக்கவென நியூ மோல்டனில் யூன் 2008 இல் அமைக்கப்பட்டது. இப் பாடசாலை தவணை வாரச் சனிக்கிழமைகளில் மு.ப. 9.15 மணி முதல் பி.ப. 3.30 மணி வரை நடைபெற்று வருகிறது. இப்பாடசாலை ஆசிரியர்களுடன் இணைந்து, பாடசாலை நிர்வாகக்குழுவின் ஆதரவுடன், பாடசாலைக் கல்வித்தரத்தை தொடர்ந்து முன்னேற்றப் பாதையில் இட்டுச் செல்ல, பாடசாலை நிர்வாகக்குழு தகுந்த தமிழ் ஆசிரியருக்கான விண்ணப்பங்களை கோருகின்றது. தமிழ் ஆசிரியருக்கான விண்ணப்பதாரர்களில் பின்வரும் தகுதிகள் எதிர்பார்க்கப்படுகின்றன:
அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழக தமிழ்மொழிப் பட்டதாரியாக இருத்தல் நல்லது.
தமிழ்மொழி கற்பித்தலில் முன் அனுபவம் .
ஐக்கிய இராச்சிய தமிழர் கல்வி மேம்பாட்டுப் பேரவையின் பாடத்திட்டத்தில் பரீட்சியம்.
ஆங்கில மொழி அறிவு.
கணனிப் பாவனையில் ஓரளவு பரீட்சியம்.
சமூக மொழி கலை கலாச்சார வளர்ச்சிக்கு உதவும் மனப்பான்மை.
இந்தப் பதவிகளில் உங்களுக்கு நாட்டமிருந்தால், உங்கள் சமீப காலத்தய அனுபவமுதிர்ச்சிப் பத்திரப் (CV) பிரதியை, 28 மாசி 2014 இல் அல்லது அதற்கு முன்பாக தயவுசெய்து கீழே தரப்பட்ட முகவரிக்கு அனுப்பி வைக்கவும். CRB Check இல் ஏற்புடைய நிலையைப் பெறுபவர்களிற்கே பதவிகள் வழங்கப்படும்.
தபால் மூலம் மின் அஞ்சல் மூலம்
Education Coordinator urajitha@yahoo.com
Surrey Tamil School
16 Grosvenor Court
Guildford
GU4 7HP
மேலதிக விபரங்களுக்கு078 7727 9995 / 079 6091 1501
Copyright Surrey Tamil School 2016-2018