ஆசிரியர்: திருமதி சியாமளா தேவி கருணாகரன்
உதவி ஆசிரியர்: திருமதி கோபிகா சுரேஷ்குமார்
திருமதி கமலா பராபரன்
Cambridge Tamil Class (GCSE OL)
சறே தமிழ் பாடசாலையில் Cambridge பாடத்திட்டத்தின் கீழ் GCSE வகுப்புக்கள் கடந்த 10 வருடங்களுக்கு மேலாக வெற்றிகரமாக நடைபெற்று வருகின்றன. இங்கு பயின்ற மாணவ, மாணவியர் Cambridge GCSE பரீட்சையில் நூறுவீத சித்தியினை எய்திவருவது இப்பாடசாலையில் பயிலும் மாணவர்களின் திறமைகளுக்கு ஒரு நற்சான்றாக அமைகிறது. கற்றல் மாத்திரமன்றி, Cambridge GCSE மாணவர்கள் பேச்சு மற்றும் நாடகத் துறைகளிலும் மிகவும் சிறப்பான முறையில் தமது பங்களிப்பை ஆற்றி வருகின்றனர். குறிப்பாகத் தமிழ் இலக்கியக் காவியங்களில் இருந்து முக்கிய பாகங்கள் தெரிந்தெடுக்கப்பட்டு மாணவ மாணவியர் துல்லியமாக மெருகூட்டிப் பயிற்றுவிக்கப்பட்டு மேடையேற்றப்படுகின்றனர். இந்த நாடகங்கள் பாடசாலை மட்டத்திலான நாடகப் போட்டிகளில் பங்கேற்று பரிசில்களையும் வென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. வாராந்தம் காலை நேர பாடசாலை ஒன்று கூடலின்போது Cambridge GCSE வகுப்பு மாணாக்கர் திருக்குறள் ஒன்றைப் படித்து அதன் பொழிப்பினையும்
அங்கே கூறிவருவதனை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்கள். மாணாக்கரிடையே இருக்கக்கூடிய மேடைக்கூச்சத்தினை இல்லாமற்செய்யவும், மொழியாற்றலில் தன்னம்பிக்கையினை வெளிப்படுத்தும் நோக்குடனும் சறே தமிழ் பாடசாலை ‘மாணவர் அரங்கம்’ என்னும் ஒரு புதிய முயற்சியை அண்மையில் அறிமுகப்படுத்தியுள்ளது. இதில் Cambridge GCSE மாணாக்கர்கள் பல்வேறு துறைசாந்தோரை சிறப்பாக செவ்விகாணுகின்றனர். இச்செவ்விகளின் காணொளிகளை சமூக வலைத்தளங்களில் நீஙகள் காணலாம்.
Cambridge GCSE lessons
Surrey Tamil School (STS) has been successfully conducting Cambridge GCSE Tamil lessons for the past 10 years with a 100 per cent pass rate. Over the years the number of students who take the exams has remarkably increased and the school is able to cater to the demands of these students and their parents and guide them accordingly towards the examination. The GCSE students have equally expressed their utmost excellence in Tamil speech and drama to a level where they had participated at competitions and secured prizes. STS takes pride in introducing the Cambridge GCSE students to moral stories in Tamil Epics and literature. They are trained to perform those stories in drama forms on stage, allowing them to showcase their acting and speech skills with no stagefear. STS holds an assembly every week in which different classes present a brief performance prepared by their class teachers. Cambridge GCSE students initiate these assembly sessions every week with a thirukkural followed by its meaning and its translation in English. STS has also introduced another event for Cambridge GCSE students which is called the ‘Manavar Arangam’. Students are given an opportunity to interview people/students of different backgrounds and/or skills. This serves as a fine opportunity for the students to exhibit their expertise in Tamil language and speech.
விண்ணப்ப படிவம் – https://forms.gle/eDGaYFqoNaKM4scg7
Cambridge Students Performances
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
Manavar Arangam
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
