ஆசிரியர்: திருமதி விஜயதேவி சூரியகுமார்
உதவி ஆசிரியர்:
திருமதி அம்ருதா சிவரதன்
திருமதி சாகித்தியா கனெந்த்திரன்
பாலர் நிலை
பாலர் நிலை என்பது பொதுவாக 5–6 அகவையுடைய குழந்தைகள் கல்வி பெறும் ஆரம்பக் கட்டமாகும். இந்த அகவைப்பருவத்தில் குழந்தைகளின் கேட்கும் திறன், பேசும் திறன் மற்றும் புதிய அறிவை விரைவாகப் பெறும் திறன் மிகவும் அதிகமாக இருக்கும். குறிப்பாக தாய்மொழியை இரண்டாம் மொழியாகக் கற்றுக்கொள்ளும் குழந்தைகளுக்கு இந்த பருவம் மிக முக்கியமானதாகக் கருதப்படுகிறது.
எனவே, இந்த அகவைக்குழந்தைகளுக்கு மொழியின் அடிப்படைத் திறன்களை மகிழ்ச்சியான சூழலில், எளிமையான மற்றும் ஆர்வமூட்டும் முறைகளின் மூலம் கற்பிப்பது அவசியமாகிறது.
பாலர் நிலை ஆசிரியர்களின் பங்கு
பாலர் நிலை ஆசிரியர்களின் பங்கு மிகவும் முக்கியமானது. குழந்தைகள் பள்ளிக்கு வரும்போது அவர்களை மகிழ்ச்சியுடன் வரவேற்று, அன்பாக உரையாடி அவர்களுடன் நெருக்கமான சூழலை உருவாக்க வேண்டும்.
இவ்வாறு அன்பும் பாதுகாப்பும் நிறைந்த சூழல் உருவானால், குழந்தைகள் பள்ளி சூழலுக்கு எளிதாகப் பழகி, கற்றலின் மீது ஆர்வம் கொண்டவர்களாக மாறுவர்.
கற்பித்தல் முறைகள் விளையாட்டுத்தன்மையுடனும், குழந்தைகளின் ஆர்வத்தை தூண்டும் விதத்திலும் இருக்க வேண்டும்.
தமிழ் மொழிக் கற்றல்
பாலர் நிலையில் தமிழ் மொழி நான்கு முக்கியத் திறன்களை அடிப்படையாகக் கொண்டு கற்பிக்கப்படுகிறது. அவை:
• கேட்டல்
• பேசுதல்
• வாசித்தல்
• எழுதுதல்
இந்த திறன்களை குழந்தைகள் எளிதில் கற்றுக்கொள்ள பாடல்கள், கதைகள், விளையாட்டுகள் மற்றும் கலைச்செயற்பாடுகள் போன்ற பல்வேறு முறைகள் பயன்படுத்தப்படுகின்றன.
பாடல்கள் மற்றும் கதைகள் மூலம் கற்றல்
பாடல்கள் மற்றும் கதைகள் குழந்தைகளின் மொழிக் கற்றலில் முக்கிய பங்கு வகிக்கின்றன. சிறு பாடல்கள், சொல்லாடல்கள் மற்றும் நகைச்சுவை கதைகள் மூலம் புதிய சொற்கள் மற்றும் அவற்றின் பொருள் குழந்தைகளுக்கு எளிதாகப் புரிய வைக்கப்படுகின்றன.
மேலும், ஒலிவட்ட வடிவில் உள்ள பாடல்கள் மற்றும் கதைகளை கேட்கச் செய்வதன் மூலம் குழந்தைகளின் கேட்டல் மற்றும் பேசுதல் திறன்கள் மேம்படுகின்றன.
விளையாட்டு வழிக் கற்றல்
விளையாட்டு வழிக் கற்றல் பாலர் நிலை கல்வியில் மிகவும் பயனுள்ளதாகும்.
உதாரணமாக, பொருட்களை காட்டி
“இது என்ன?” – “இது பழம்”
என்று சொல்லச் செய்து மொழிப் பயிற்சி வழங்கலாம்.
மேலும், பெயர்ச் சொற்களை செயலட்டைகளில் எழுதி சிறிய நாடகங்களாக குழந்தைகளை நடிக்கச் செய்வதன் மூலம் அவர்கள் தமிழ் மொழியை நடைமுறையில் பயன்படுத்தும் வாய்ப்பு கிடைக்கிறது.
படங்கள் மற்றும் சிறுவர் நூல்கள்
படங்களுடன் கூடிய சிறுவர் நூல்களைப் பயன்படுத்தி, குழந்தைகளிடம் படங்களைப் பார்த்து கதைகளைச் சொல்லச் செய்வது அவர்களின் பேச்சுத் திறனை வளர்க்க உதவுகிறது.
இதனால் குழந்தைகள் கற்பித்தலை சுவாரசியமாக அனுபவித்து, மொழிக் கற்றலில் ஆர்வம் பெறுகின்றனர்.
காணொளிகள் மற்றும் பாடல்கள்
குழந்தைகளுக்கான தாய்மொழிக் கல்வி நிகழ்ச்சிகள், பாடல்கள் மற்றும் கேலிச்சித்திரங்கள் போன்றவற்றைப் பயன்படுத்தி உரையாடல்களை நடத்தலாம்.
இவ்வாறான காட்சிகள் மற்றும் ஒலிகள் மூலம் குழந்தைகளின் தமிழ் மொழி அறிவு மேலும் விரிவடைகிறது.
கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்பு
மாணவர்களை பல்வேறு கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்கச் செய்வது அவர்களின் தன்னம்பிக்கையை வளர்க்கிறது மற்றும் மேடைக்கூச்சத்தை குறைக்க உதவுகிறது.
உதாரணமாக:
• காலை நேரஒன்று கூடல்
• கலை விழாக்கள்
• நத்தார் தின விழா
• கலையமுதம்
போன்ற நிகழ்ச்சிகள்
இவற்றில் மாணவர்கள் பங்கேற்பதன் மூலம் அவர்கள் திறமைகள் வெளிப்படுகின்றன.
வாசிப்பு திறன் வளர்த்தல்
வாசிப்பு திறனை வளர்க்க பல்வேறு செயற்பாடுகள் மேற்கொள்ளப்படுகின்றன.
• வர்ணப் படங்களை காட்டி வாசிக்கச் செய்தல்
• படங்களுடன் ஒலி வடிவத்தை இணைத்து கற்பித்தல்
• பட அட்டைகளை காட்டி பெயர்களைக் கூறச் செய்தல்
இத்தகைய செயல்பாடுகள் குழந்தைகளின் வாசிப்பு ஆர்வத்தையும் திறனையும் மேம்படுத்துகின்றன.
எழுதுதல் பயிற்சி
பாலர் நிலையில் எழுதும் திறனை வளர்க்க பல்வேறு பயிற்சிகள் வழங்கப்படுகின்றன.
• சுழி (Tracing) பயன்படுத்தி எழுதும் பயிற்சி
• வர்ணம் தீட்டுதல்
• புள்ளிகளை இணைத்தல்
• எழுத்துக்களை சரியான வடிவில் எழுத பழக்குதல்
• எழுத்துக்களை கொடுத்து சொற்கள் உருவாக்கச் செய்தல்
இவை குழந்தைகளின் கை இயக்கத் திறனையும் எழுத்துத் திறனையும் மேம்படுத்துகின்றன.
மதிப்பீடு
பாலர் நிலையில் மாணவர்களின் கற்றல் முன்னேற்றம் பல்வேறு மதிப்பீட்டு முறைகள் மூலம் கண்காணிக்கப்படுகிறது. அவை:
• அலகு மதிப்பீடு
• தொடர் மதிப்பீடு
• தவணை மதிப்பீடு
• செயற்பாட்டு மதிப்பீடு
இந்த மதிப்பீடுகளின் மூலம் மாணவர்களின் முன்னேற்ற அறிக்கைகள் தயாரிக்கப்பட்டு பெற்றோருக்கு தெரிவிக்கப்படுகின்றர்
பாலர் நிலை கல்வி குழந்தைகளின் அடிப்படை மொழித் திறன்களை வளர்க்கும் முக்கியமான கட்டமாகும். மகிழ்ச்சியான கற்றல் சூழல், விளையாட்டு வழிக் கற்றல் மற்றும் பல்வேறு செயற்பாடுகள் மூலம் குழந்தைகள் தாய்மொழியை எளிதாக கற்றுக்கொண்டு தன்னம்பிக்கையுடன் முன்னேறுகின்றனர்.
விண்ணப்ப படிவம் – https://forms.gle/eDGaYFqoNaKM4scg7
Introduction to Early Childhood Education
Early childhood education generally refers to the initial stage of schooling for children aged 5–6 years. During this stage, children demonstrate a high ability to listen, speak, and quickly acquire new knowledge. This developmental period is particularly important for children who learn their mother tongue as a second language.
Therefore, it is essential to teach children of this age the basic language skills through simple, enjoyable, and engaging methods in a pleasant learning environment.
The Role of Early Childhood Teachers
The role of teachers at the early childhood level is very significant. When children arrive at school, teachers should welcome them warmly and interact with them kindly, creating a friendly and supportive environment.
When an atmosphere of love and security is created, children can easily adapt to the school environment and develop a strong interest in learning.
Teaching methods should be play-based and stimulating, encouraging children’s curiosity and participation.
Teaching the Tamil Language
At the early childhood level, the Tamil language is taught based on four main language skills:
• Listening
• Speaking
• Reading
• Writing
To help children learn these skills easily, various teaching methods such as songs, stories, games, and creative activities are used.
Learning Through Songs and Stories
Songs and stories play an important role in children’s language learning. Short songs, rhymes, and humorous stories help children understand new words and their meanings in an enjoyable way.
Furthermore, listening to audio-based songs and storytelling helps to improve children’s listening and speaking abilities.
Learning Through Play
Play-based learning is highly effective in early childhood education.
For example, teachers may show objects and ask:
“What is this?” – “This is a fruit.”
In addition, writing nouns on activity cards and allowing children to perform short role-plays or small dramas helps them use the Tamil language in practical situations.
Pictures and Children’s Books
Using illustrated children’s books and encouraging children to describe pictures or narrate stories based on them helps develop their speaking skills.
This method also makes learning more interesting and motivates children to engage in language learning.
Videos and Songs
Educational programmes, songs, and cartoon videos in the mother tongue can be used to stimulate discussions with children.
Through these visual and audio learning materials, children’s understanding and knowledge of the Tamil language can be further enhanced.
Participation in Cultural Activities
Encouraging students to participate in various cultural activities helps build their self-confidence and reduce stage fear.
Examples include:
• Morning assemblies
• Cultural festivals
• Christmas celebrations
• Arts programmes such as Kalaiyamudham
Through participation in such events, children are able to express and develop their talents.
Developing Reading Skills
Several activities are used to improve children’s reading skills, such as:
• Showing colourful pictures and encouraging children to read or describe them
• Combining visual pictures with audio sounds during teaching
• Showing picture cards and asking children to identify and say the names
These activities help increase children’s interest and ability in reading.
Writing Practice
Various exercises are used to develop writing skills at the early childhood level, including:
• Tracing exercises for writing practice
• Colouring activities
• Connecting dots
• Practising correct formation of letters
• Forming words using given letters
These activities help improve fine motor skills and writing ability.
Assessment
Students’ learning progress at the early childhood level is monitored through several assessment methods, including:
• Unit assessment
• Continuous assessment
• Term assessment
• Activity-based assessment
Through these evaluation methods, progress reports are prepared and communicated to parents.
Conclusion
Early childhood education is an important stage for developing children’s basic language skills. Through a joyful learning environment, play-based teaching methods, and various creative activities, children can learn their mother tongue easily and progress with confidence and enthusiasm.
விண்ணப்ப படிவம் – https://forms.gle/eDGaYFqoNaKM4scg7
Palar Nilai Students Performances
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
